HOW TO PREPARE SRIVILLIPUTHUR PALKOVA RECEIPE IN TAMIL

24

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்வது எப்படி

 

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்வது எப்படி என பார்ப்போம்.  ஸ்ரீவில்லிபுத்தூர் மிக பிரபலமான இடம் அதே போல் பால்கோவாவும் மிகவும் பிரபலமானது.  பால்கோவா வீட்டில் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

  • பசும் பால்              1 லிட்டர்
  • சர்க்கரை                150 கிராம்
  • ஏலக்காய்  பொடி    1/2 டீஸ்பூன்

 

செய்முறை

 

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்ய முதலில் அடி  கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதை அடுப்பில்வைத்து பாலை ஊற்றவும்.  பிறகு மிதமான தீயில் பாலை காய்ச்சவும். ஒரு அரை மணி நேரம் கழித்து  பால் சுண்டி பால் கெட்டியாக  மாறும்.   இந்த நேரத்தில் சர்க்கரையை சேர்க்கவும்.  பாலில் சர்க்கரை கரைந்து பாலின் நிறம் மாறும் நன்றாக கிளறி கொண்டு இருக்கவேண்டும்.

 

பிறகு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.  அடுப்பை நிறுத்தவும்,  இந்த பால் கோவாவிற்கு NUTS எதுவும் தேவை இல்லை.  தேவை பட்டால் பால்கோவைவில் இறுதியில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர் ஒன்று கோவிலுக்கு  பிரபலமானது, மற்றோன்று பால்கோவாவிற்கு பிரசித்திபெற்றது.  பால்கோவாயென்றதும் நினைவிற்கு வருவது ஸ்ரீவில்லிபுத்தூர் தான்.  இது ஒரு தமிழ் நாட்டு இனிப்பு வகை ஆகும்.  எளிமையான  மிக எளிதாக செய்ய கூடிய ஒரு இனிப்பு வகை.

 

தென்னிந்தியாவில் அதிக அளவில் எல்லோராலும் விரும்பப்படுவதும்.  திருநெல்வேலிக்கு அல்வா அதுபோல ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பால்கோவா ஆகும்.  இது ஒரு குடிசை தொழிலாக செய்து பல மாவட்டக்களுக்கு அனுப்பப்படுகிறது.

 

குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பப்படும் ஒரு இனிப்பு வகைஆகும்.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா எல்லா இடங்களிலும் சிறிய அளவில் மற்றும் பெரிய அளவிலும் கிடைக்கிறது.  பால் கோவா  செய்ய பசும்பால் மிகவும் ஏற்றது.  பசும் பால் கிடைக்காவிட்டாள்  வேறு பால் பயன்படுத்தலாம். பால் அடிபிடிகாமல்  இருக்க  தொடர்ந்து கரண்டியால் கிளறிக்கொண்டு இருக்க வேண்டும்.

 

பாலில் பலவகை இனிப்புகள் செய்வது உண்டு.  பால் மட்டும் சேர்த்து செய்யும் உணவு வகை ஆகும்.  அதனால் ஆரோக்கியதிற்கு ஏற்றது.  பால் கோவை சாப்பிட்டதும் ஒரு வித சக்தி கிடைக்கும்.  உடம்பெற்க்கு ஒரு சக்தியும் கிடைக்கிறது.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here