HOW TO MAKE PRAWN PAKODA IN TAMIL

36

இறால் (prawn) பக்கோடா செய்வது எப்படி

prawn பக்கோடா செய்வது எப்படி என பார்ப்போம்.  நாம் பலவித பக்கோடா சாப்பிட்டு இருப்போம்.  இன்று வித்தியாசமான ரெசிபி prawn பக்கோடா ஆகும்.

 

தேவையான பொருட்கள்

  • இறால்                       250 கிராம்
  • அரிசி மாவு                  50 கிராம்
  • கடலை மாவு              100 கிராம்
  • பாசி பருப்பு மாவு         50 கிராம்
  • வெங்காயம்               150 கிராம்
  • பச்சை மிளகாய்           10
  • பூண்டு இஞ்சி பேஸ்ட்     2 டீஸ் ஸ்பூன்
  • கறிவேப்பிலை                சிறிதளவு
  • உப்பு                              தேவைக்கேற்ப
  • எண்ணெய்                      தேவைக்கேற்ப
  • சோம்பு தூள்                    1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

 

இறால் பக்கோடா செய்ய  சுத்தம் செய்த இறாலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.  வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, சோம்புத் தூள், உப்பு, எல்லாவற்றையும்  ஒன்றாக கலக்கவும்.  கலவையுடன் கடலை மாவு, அரிசி மாவு,பசி பருப்பு மாவு சேர்த்து சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறவும்.  கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசறவும்.  கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்தாள் தான் மாவு உதிர்ந்து விடும் பக்குவத்தில் அமையும்.

 

கடாயில் எண்ணெய் விட்டு மிதமாக எண்ணெய் காய வைத்து பக்கோடா கலவையை எடுத்து மெதுவாக உதிர்த்துப் போடவும்.  புரட்டி புரட்டி விடவும்.  எல்லா பக்கமும் ஒன்று போல பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

 

இறால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.  அதிலும் இறாலை கொண்டு செய்யும் போது என்றால் பக்கோடாவின் சுவை அலாதியானது.  சாதாரணமாக வெங்காய பக்கோடா முந்திரி பக்கோடா, கீரை பக்கோடா, சிக்கன் பக்கோடா என பல வகைகளில் செய்து சாப்பிட்டுருப்போம்.   இறால் கொண்டு செய்யும் பக்கோடாவை எப்போதாவது தான் சாப்பிட்டு இருப்போம்.

 

ஒரு வித்தியாசமான ரெசிபி ஆகும்.  இறால் பகோடா மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.  உணவிற்கு சைடு டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.  இறால் பக்கோடா ஆசியாவின் உணவு ஆகும்.  மேலும் தென்னிந்தியா உணவு வகைகளில் ஒன்று.

 

சிக்கன் பக்கோடாவை போன்று இறால்  பக்கோடாவும் மொறு மொறு என்று இருக்கும்.  பிரியாணிக்கு ஏற்ற ஒரு சைடு டிஷ்.  சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் பொருத்தமான ஒரு சைடு டிஷ்.

 

குழந்தைகள் ஸ்கூலுக்கு மதிய உணவு எடுத்து சென்றால் சரியாக சாப்பிட மாட்டார்கள், ஆனால் இறால் பக்கோடாவை பொரித்து பள்ளிக்கு மதிய உணவிற்கு கொடுத்து விட்டால் முழுவதும் சாப்பிடுவார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here