HOW TO PREPARE MUTTON RASAM IN TAMIL

42

மட்டன் ரசம் செய்வது எப்படி

 

இன்று மட்டன் ரசம் செய்வது எப்படி என்ன பார்ப்போம்.  ஆட்டு எலும்பில் ரசம் செய்வார்கள்.  ஆட்டு ரசம் சுவையாக இருக்கும்.  விரும்பி சாப்பிடுவார்கள்.

 

மட்டன் ரசம்

 

தேவையான பொருட்கள்

 

  • ஆட்டு எலும்பு                  500கிராம்
  • மிளகு தூள்                       2 டீஸ் ஸ்பூன்
  • சீரகத் தூள்                       2 டீஸ்  ஸ்பூன்
  • இஞ்சி விழுது                    2 டீஸ்  ஸ்பூன்
  • பூண்டு பல்                        10
  • சிவப்பு மிளகாய்                 4
  • மஞ்சள் தூள்                      1  டீஸ் ஸ்பூன்
  • எலுமிச்சை பழம்                1
  • உப்பு                                   தேவையான அளவு
  • கறிவேப்பிலை                     தேவையான அளவு

தாளிக்க

 

  • நல்லெண்ணெய்                   1 டேபிள் ஸ்பூன்
  • சாம்பார் வெங்காயம்            50 கிராம்
  • கொத்து மல்லி                        தேவையான அளவு

செய்முறை

 

மட்டன் ரசம் செய்வது எப்படி என பார்ப்போம்.  முதலில் அதிகம் கறி இல்லாத எலும்பு துண்டாக கேட்டு கடையில் வாங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கர் பாத்திரத்தில் போடவும்.  அதில் மஞ்சள் தூள், இஞ்சி விழுது, உப்பு சேர்த்து கலக்கி எலும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

 

குக்கரை அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.  நான்கு விசில் வந்ததும்.  அடுப்பை மிதமான தீயில் ஒரு பத்து நிமிடம் வேக வைக்கவும்.  பத்து நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.

 

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சிவப்பு  மிளகாய் வற்றல், மிளகுத் தூள்,சீரகத்தூள், பூண்டு பல்,நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

எலும்பு துண்டு வெந்த சாற்றை வடித்து எடுத்து தாளித்ததில் சேர்த்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு மூடி மட்டன் ரசம் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

 

மட்டன் ரசம் ரெடி.  நோய்வாய்ப்பட்டவர்கள், உடல் நலிவுற்றவர்கள் சாப்பிட உகுந்த ரசம் மட்டன் ரசம் ஆகும்.  மட்டன் சூப் or ரசம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவதாகும்.  அதுவும் மழை காலங்களில் அந்த குளிருக்கு இதமாக இந்த மாதிரி சூடான ரசம் சாப்பிட எல்லோரும் விரும்புவது தான்.

 

சளி, ஜலதோஷம் காய்ச்சல் போன்றவைக்கு ஏற்ற சூடான ரசம் மட்டன்.  அதில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு உடம்பெற்க்கு எதிர்ப்பு சக்தி கொடுக்க கூடிய, மற்றும் சீரணத்தை அதிகரிக்க கூடிய பொருட்கள் சேர்த்து இருப்பதால், மட்டன் ரசம் சுவையாகவும், நமக்கு தெம்பு கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

 

மட்டன் உள்ள எல்லா பகுதிகளும் நமது உடன்பெற்கு மிகவும் நல்லது.  ஆட்டின் உள்ள ஒவ்வொரு பாகங்கள் நம் உடம்பெற்க்கு சாப்பிடுவதால் சக்தி கொடுக்கிறது.மட்டன் ரசம் எலும்பை கொண்டு செய்கிறோம்.  அதுபோல ஈரல் ரசம், மண்ணீரல் ரசம் ஆட்டு கால் சூப் என சமைக்கலாம்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட நன்மை தரும்.  ஆடு இயற்கை தீவனத்தை சாப்பிடுவதால்,  ஆட்டை நாம் சமைத்து சாப்பிடுவதால் நமக்கும் இயற்கை சத்துக்கள் கிடைக்கிறது.

 

மட்டன் உடம்பின் வளச்சிக்கு உதவிக்கிறது.  மட்டன் ரசத்தில் கால்சியம் அதிகம் உள்ளது.  எலும்பை கொண்டு செய்வதால் கால்சியம்  மற்றும் பிற சத்துக்கள் நிறைந்து உள்ளது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here