HOW TO PREPARE MILLET PULAV AND PAYASAM

34

சிறு தானிய தினை புலாவ்  மற்றும் பாயசம் செய்வது  எப்படி

தினை ஒரு சிறு தானியம் இன்று தினையில் புலாவ் மற்றும் பாயசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.   சிறு தானியமான தினை உடம்பிற்க்கு ஆரோக்கியமானது.

 

 

 

தினை புலாவ்

 

தேவையான பொருட்கள்

  • தினை                            1 கப்
  • வெங்காயம்                    2
  • கேரட்                              1
  • பீன்ஸ்                              50 கிராம்
  • பட்டாணி                          50 கிராம்
  • பட்டை                              1 துண்டு
  • பிரிஞ்சி இலை                  1
  •  அன்னாசி பூ                    1
  • புதினா                              1 கை  பிடி
  • கொத்துமல்லி                    1 கை பிடி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்          1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய்                  5
  • எண்ணெய்                           தேவையான அளவு
  • நெய்                                    2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர்                              2 கப்
  • உப்பு                                    தேவைக்கேற்ப

செய்முறை

 

தினை புலாவ் செய்ய முதலில் தினையை தண்ணீர் விட்டு நன்கு அலசவும். தினையை சிறிது நேரம் ஊறவைக்கவும்.  பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு நெய்யும் சேர்த்து சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, வெங்காயம் நறுக்கியது, இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து  வதக்கவும்.  அத்துடன் புதினா இலை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி சேர்க்கவும், கொத்துமல்லி சுத்தப்படுத்தி அலசி சேர்க்கவும்.  பச்சை மிளகாய் நீள வக்கீல் வெட்டி சேர்க்கவும்.  ஒன்றன் பின் ஓன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.   பிறகு தினையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

 

தண்ணீர் 2 கப் சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கவும்.  பிறகு குக்கரை மூடவும்.  ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.  ஒரு 7 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும்.  பிறகு பரிமாறவும். சூடான சுவையுண தினை புலாவ் ரெடி, தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

தினை பாயசம்

 

தேவையான பொருட்கள்

 

  • தினை                 1/2 கப்
  • தண்ணீர்              1 1/2 கப்
  • பால்                     300 ML
  • ஏலக்காய்              4
  • முந்திரி                  5
  • பாதாம்                  5
  • சர்க்கரை               3/4 கப்

 

செய்முறை

 

தினை பாயசம் செய்ய முதலில் தினையை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.  பிறகு ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி ஊறவைத்த தினையை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். பிறகு பால் சேர்த்து வேக விடவும் அடி  பிடிக்காமல் இருக்க கரண்டியால் கலக்கி கொண்டு இருக்க வேண்டும். பிறகு  சர்க்கரை சேர்க்க வேண்டும்.  தினை பாயசத்தில் சர்க்கரை சேர்த்து கரண்டியால் நன்கு கலக்க வேண்டும்.

 

மிக்ஸியில் ஏலக்காய் முந்திரி பாதாம் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில்  பொடி செய்யவும்.  வெந்த தினை பாயசத்தில் இந்த பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும்.  இப்போது தினை பாயசம் ரெடி சூடாகவோ, ஆறியவுடன்னோ பறிமாறவும்.

 

தினை பாயசம் சுவையாகவும் ஆரோக்கியமானதும் ஆகும்.  திணையில் அதிக அளவு நார்சத்து உள்ளது.  நார்சத்து உள்ளதால் ரத்தம் அழுத்தம் உள்ளவ்ர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.  இந்த பாயசத்தில் முந்திரி பாதாம் பொடியாக சேர்த்து உள்ளேன்.  ஏனெனில் சிலர் முந்திரி பாதாமை தனியாக எடுத்து வைத்து சாப்பிடுவார்கள் பொடியாக சேர்ப்பதால் பாயாசத்துடன் கலந்து  விடுகிறது.

 

மற்றென்று ரெசிபி தினை புலாவ் இதை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.  வித்தியாசமான ரெசிபி. ஆரோக்கியமானது ஆகும்.

 

தயார் செய்ய         : 10 நிமிடம்

சமைக்கும் நேரம்   :  15 நிமிடம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here