HOW TO PREPARE JEERA RICE WITH SEER FISH KABAB IN TAMIL

25

சீரகம் சாதம் உடன் வஞ்சர மீன் கபாப் செய்வது எப்படி

 

 

சீரகம் சாதம் சுவையானதும் சத்துள்ளதும் ஆன சாதம் ஆகும்.  அத்துடன் வஞ்சர மீன் கபாப் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகரிக்கும்.

 

தேவையான பொருட்கள்

 

  • பாசுமதி அரிசி          1 கப்
  • தண்ணீர்                   1 1/2 கப்
  • சீரகம்                        3டேபிள் ஸ்பூன்
  • மராட்டி  மொக்கு       1
  • லவங்கம்                    3                                  ஜே
  • பட்டை                        1
  • நெய்                           2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு                           தேவையான அளவு

செய்முறை

சீரகம் சாதம் செய்ய முதலில் பாசுமதி அரிசியை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.  பிறகு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும் .  பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, சீரகம் முதலியவற்றை சேர்த்து நெயில் பொரிந்ததும், பாசுமதி அரிசியை சேர்க்கவும்.  பின்பு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.  ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை மிக மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் கழித்து நிறுத்தவும்.   காற்று வெளியேறிய உடன் திறந்து பரிமாறவும்.

 

சுவையான சத்தான உடம்பெற்க்கு ஆரோக்கியமான சீரகம் சாதம் ரெடி.

 

                                                 வஞ்சர மீன் கபாப்

 

தேவையான பொருட்கள்

  • வஞ்சர மீன்                        1  கிலோ
  • மஞ்சள் தூள்                       1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை  சாறு                2 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி       விழுது            2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த் தூள்                   2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால்                    100 மில்லி
  • மைதா அல்லது சோள மாவு 300 கிராம்
  • உப்பு                                    தேவையான அளவு
  • எண்ணெய்                            பொரிப்பதற்கு

செய்முறை

வஞ்சர மீன் வாங்கி நன்கு சுத்தம் செய்து சம அளவு உள்ள  துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.  துண்டுகளை வட்டமாக படி அமையும் படி வெட்டவும்.  தலை, வால் பகுதிகளை நீக்கி விடவும்.

 

கழுவிய மீனை நன்றாக தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.  ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தக்காளி விழுது, மிளகாய்த் தூள்,தேங்காய் பல், உப்பு அனைத்தையும் ஒன்றாக போட்டு  கலக்கவும்.

 

இந்த கலவையில் மீன் துண்டுகளை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.  ஒரு அகலமான தட்டில் மைதா  அல்லது சோள மாவை பரத்தி வைக்கவும்.

 

ஊறிய மீன் துண்டுகளை அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறிய மீன் துண்டுகளை ஒன்று ஒன்றாக எண்ணையில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

 

வஞ்சர மீன் கபாப் ரெடி இந்த சைடு டிஷ் உணவு வகைகளோடு மற்றும் தேநீர் உடன் பரிமாறலாம்.  சிறப்பு விருந்தோம்பலுக்கு பயன்படுத்தலாம்.

 

இன்று நாம் பார்த்தது சீரகம் சாதம், வஞ்சர மீன் கபாப் ஆகும்.  சீரகம் சாதத்துடன் வஞ்சர மீன் கபாப் சேர்த்து சாப்பிடும் பொது மிக அருமையாக இருக்கும்.  சீராக சாதம்  காரம் இல்லாமல் இருக்கும், வஞ்சர மீன் முள் இல்லாமல் இருக்கும்.  எனவே  குழந்தைகள் முதல் பெரியவர் வரை  விரும்பி சாப்பிடுவார்கள்.  எனவே  இந்த டிஷ் செய்து சாப்பிட்டு பார்த்து பிடித்திருந்தால் ஷேர் செய்யவும்.  இன்று ஒரு வித்தியாசமான ரெஸிபி பார்த்தோம்.  நாளை வேறு ஒரு ரெஸிபி பார்ப்போம்.

 

 

\

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here