HOW TO PREPARE FISH VADAI AND FISH CHOPS SS

30

மீன் வடை மற்றும் மீன் சாப்ஸ் செய்வது எப்படி

 

இன்று மீன் வடை மற்றும் மீன் சாப்ஸ் செய்வது எப்படி என பார்ப்போம்.  பொதுவாக நாம் மீனை வைத்து குழம்பு , வறுவல், பொரித்து சாப்பிடுவோம்.  இன்று ஒரு வித்தியாசமான ரெஸிபி.

 

மீன் வடை

 

 

மீன் வடை செய்ய

தேவையான பொருட்கள்

 

  • மீன்                          500 கிராம்
  • கடலை பருப்பு          200 கிராம்
  • வெங்காயம் நறுக்கியது  2
  • இஞ்சி பூண்டு விழுது       1 டேபிள் ஸ்பூன்
  • கச கசா      தூள்              2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் விழுது   2 டீஸ்பூன்
  • தக்காளி விழுது               1 டேபிள் ஸ்பூன்
  • கொத்துமல்லி                  தேவையான அளவு
  • கறிவேப்பிலை                 தேவையான அளவு
  • உப்பு                                தேவையான அளவு
  • எண்ணெய்                       பொரிப்பதற்கு

செய்முறை

 

சுத்தம் செய்து கழுவிய மீனை முள்ளில்லாமல் சதையை மட்டும் எடுத்து வைக்கவும்.  மீன் சதையை கையால் நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.  கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.  ஊறவைத்த பருப்பை கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.  இத்துடன் மீன், பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது, கசகசா பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசையவும்.

 

பிறகு உப்பு சேர்த்து தக்காளி விழுது சேர்த்து நன்கு கலந்து மீன் கலவையை வட்டவடிவமாக வடையாக தட்டி, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காய்ந்த எண்ணையில் போட்டு மீன் வடையை பொரிக்கவும் ஒருபக்கம் வெந்ததும் மீன் வடையை மறு பக்கம் திருப்பி விட்டு வேக விடவும்.

 

மிதமான தீயில் பொரிக்கவேண்டும்.  தோசை கல்லில் சிறிது எண்ணெய்விட்டும் மீன் வடையை பொரிக்கலாம்.  மிதமான தீயில் பொரிக்கும் போது சுவை அதிகரிக்கும்.

 

மீன் வடை தயார்.  உணவோடும் தேநீர் உடனும் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

 

மீன் சாப்ஸ்

 

மீன் சாப்ஸ் செய்ய

 

தேவையான பொருட்கள்

 

  • மீன்  துண்டுகள்      10
  • நல்லெண்ணெய்      100 கிராம்
  • கடுகு                       1 டீஸ்பூன்
  • சீரகம்                      1 டீஸ்பூன்
  • மிளகு தூள்               2 டீஸ்பூன்
  • சோயா சாஸ்            1 டீஸ்பூன்
  • உப்பு                         தேவையான அளவு

 

செய்முறை

 

முள் அதிகம் இல்லாத மீன் துண்டுகளை வாங்கி கழுவி சுத்தம் செய்யவும்.  அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரம் போட்டு பொரிந்ததும் உப்பு,  மீன், மிளகுத்  தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி மிதமான தீயில் வேக வைக்கவும்.

 

மீன் வெந்ததும் பக்குவமாக சோயா சாஸ் சேர்த்து மீனை மெதுவாகப்  புரட்டிக் கொடுத்து இறக்கி மூடிவைக்கவும்.  ஆறியதும் பரிமாறவும்.

 

மீன் ஒரு மிகச் சத்துள்ள உணவு பொருள் ஆகும்.  மீனில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது எனவே குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை ஏற்ற உணவு ஆகும்.  மீனில் உள்ள ஒமேகா 3 fatty acid உடம்பெற்க்கு மிகவும் நல்லது.  மேலும் அதில் உள்ள விட்டமின்ஸ் D அண்ட் B 2 மற்றும் அதிகளவு கால்சியம் அண்ட் பாஸ்பரஸ் உள்ளது.  அதிக அளவு மினரல்ஸ் உள்ளது இரும்பு சத்து, ஜின்க் சத்து, ஐயோடின் மக்னிசியும் மற்றும் பொட்டாசியம் மிகவும் நிறைந்துள்ளது.

 

இன்று மிகவும் சத்து நிறைந்த மீனை கொண்டு செய்த மீன் வடை மற்றும் மீன் சாப்ஸ் உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகிறேன்.  பிடித்திருந்தால் மற்றவருக்கு ஷேர் செய்யவும்.  இது  ஒரு இந்தியா உணவு வகை சார்ந்தது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here