HOW TO PREPARE ATHIRASAM SWEET IN TAMIL

38

அதிரசம் செய்வது எப்படி

 

இன்று அதிரசம் செய்வது எப்படி என பார்ப்போம்.  அதிரசம் என்ற  பலகாரம் இன்றும் விசேஷதில்   முதலாவதாக இடம் பெறுகிறது.  அதிரசம் சுவையான இனிப்பு பலகாரம்.

 

தேவையான பொருட்கள்

 

  • பச்சை அரிசி( மாவு அரிசி   )     500 கிராம்
  • பாகு வெல்லம்                            750 கிராம்
  • ஏலக்காய்                                   10
  • சுக்கு  தூள்                                 1  டேபிள் ஸ்பூன்
  • கடலை எண்ணெய்                     750 கிராம்
  • நெய்                                          1 டேபிள் ஸ்பூன்

 

♦செய்முறை ♦

 

அதிரசம் செய்வது எப்படி என பார்ப்போம்.  முதலில் மாவு பச்சை அரிசி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.  நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.  பிறகு ஒரு துணியில் காயா வைக்கவும்.  பாகு வெல்லத்தை நன்கு தட்டி தூள் செய்யவும்.   தூள் செய்த வெல்லத்தை  ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.  வெல்லம் கரைந்த பின் வேறு ஒரு பாத்திரத்தில் வடி கட்டி பாகு காய்ச்ச தயார் செய்யவும்.

 

காயவைத்த அரிசியில் கை  வைத்து அழுத்தினாள் கையில் அரிசி ஓட்டவேண்டும் அதிக நேரம் காயக்கூடாது.  மாவு மிஷின் அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.  நைசாக அரைக்க கூடாது.  புட்டுக்கு அரைப்பது போல் அரைக்க வேண்டும்.  அதிரசம் செய்ய பாகு காய்ச்ச வேண்டும், வெல்லம் கலந்த தண்ணீர் அடுப்பில் காய்ச்சும் போது தண்ணீர் சுண்டி கொண்டு வரும்.  ஒரு தட்டில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் பாகை கரண்டியால் எடுத்து ஒரு சொட்டு விட்டால் கரைந்து விடும்.  இது சரியான பக்குவம் இல்லை.  இன்னும் நீர் வற்ற வேண்டும்.  பாகு தண்ணீரில் ஒரு சொட்டு விட்டால் பாகை கையில் எடுத்து பார்த்தால் மிருதுவாக பந்து போல் உருளும்.

 

இது சரியான பக்குவம் உடனே அடுப்பை நிறுத்தி சூடான பாகில் அரைத்த பச்சை அரிசி மாவை சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.  மாவு கட்டி பட கூடாது.  கைவிடாமல் கிளறவும்.  எல்லாம் மாவு போட்டு  நன்கு கிளறவும்.  பிறகு ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.  பிறகு ஒரு பாத்திரத்தில்அதிரசம் பாகை மாற்றி பாத்திரத்தை நன்கு மூடி வைக்கவும்.

சூடு அறிய பின் அல்லது மறு நாளோ ஒரு வாழை இலையில் எண்ணெயோ நெய்யோ தடவி ஒரு எலுமிச்சை அளவு சைஸில் அதிரச பாகை  எடுத்து இலையில் வைத்து மூன்று விரல்களால் தட்ட வேண்டும்.  தேவையான அளவு உருண்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவைகளை தட்டி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.  மீதி உள்ள அதிரச மாவை ஒரு டப்பாவில் போட்டு பிரிஜ் உள் வைத்து கொள்ளலாம் தேவை படும்போது எடுத்து அதிரசம் செய்துக்  கொள்ளலாம்.

 

ஒரு கடாயில் கடலை என்னை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.  எண்ணெய் காய்ந்ததும் தட்டிய மாவை எண்ணெயில் பொரிக்கவும்.  மிதமான தீயில் பொரித்தால் தான் அதிரசம் உள்ளேயும் வேகும்.  இப்போது  சுவையான  அதிரசம் தயார்.  அதிரசம் எடுக்கும் போது வேறு ஒரு கரண்டியால் அதிரசத்தை அழுத்தினாள் மீதம் உள்ள எண்ணெய் வழிந்து விடும்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here