HOW TO EASY TO PREPARE HOME MADE SWEET POLI

44

எளிய முறையில் வீட்டிலே ஸ்வீட் செய்வது எப்படி

 

வீட்டலே எளிய முறையில் ஸ்வீட் போலி செய்வது எப்படி என பார்ப்போம்.  இப்போது  உள்ள காலகட்டத்தில் வெளியில் சென்று சாப்பிடுவதை விட வீட்டில் சாப்பிடுவதுதான் நல்லது.

 

ஸ்வீட் போளி (தேங்காய் பூரணம்)

 

தேவையான பொருட்கள்

♦ பூரணம் செய்வதற்கு ♦

  • வெல்லம்                   350 கிராம்
  • தேங்காய்   துருவல்   1 கப்
  • ஏலக்காய்   பவுடர்     1/2 டீஸ்பூன்
  • தண்ணீர்                   1/4 கப்

போளி செய்வதற்கு

  • கோதுமை                      2 கப்
  • தண்ணீர்                        தேவையானளவு
  • உப்பு                              1/4 ஸ்பூன்
  • நெய்                               2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய்                      தேவையான அளவு

செய்முறை

 

 

முதலில் வெளி மாவை தயார்  வேண்டும்.  கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தண்ணீர் சிறிது சிறிதுவாக பிசைய வேண்டும்.  பிசைந்த பின் மாவை மூடி வைக்கவேண்டும்.

 

உள்ளே வைக்கும் பூரணத்தை தயார் செய்ய வேண்டும்.   வெல்லத்தை தூளாக நறுக்கி கொள்ள வேண்டும்.  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்க்க வேண்டும்.   சிறிது தண்ணீர் சுண்டியவுடன் தேங்காய் துருவளை சேர்த்து கொள்ளவேண்டும் அத்துடன், ஏலக்காய் சேர்க்க வேண்டும்.  பாகு கெட்டி ஆனவுடன் இறக்கி விடவும்.

 

ஆறியவுடன் போளி செய்யும் அளவிற்கு ஏற்றவாறு பூரணத்தை உருண்டையாக உருட்டி கொள்ளவும்.  மாவை சப்பாத்திக்கு தரட்டுவதை போல் வட்ட வடிவமாக தட்ட வேண்டும்.  அதில் பூரணத்தை வைத்து மறுபடியும் உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும்.  எண்ணெய் அல்லது நெய் தடவி தட்டவேண்டும்.  பிறகு சப்பாத்தி கல்லை வைத்து போளி எண்ணெய் சுற்றி ஊற்ற வேண்டும்.இரண்டு பக்கமும் திருப்பிம்போட்டு சுட வேண்டும். எப்போது தேங்காய் ஸ்வீட் போளி  ரெடி.

அடுத்ததாக ஸ்வீட் பருப்பு போலி செய்வது எப்படி எனக் காண்போம்.

 

         ஸ்வீட் பருப்பு போளி

 

மேல் மாவிற்கு தேவையான  பொருட்கள்

 

  • கோதுமை மாவு    1கப்
  • உப்பு                     1/4 டீஸ்பூன்
  • தண்ணீர்               தேவையான அளவு
  • நெய்                    2 டீஸ்பூன்
  • எண்ணெய்           தேவையான அளவு

பூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்

 

  • கடலை பருப்பு                1 கப்
  • வெல்லம்                         1 கப்
  • ஏலக்காய்             தூள்     1/2 டீஸ்பூன்
  • தண்ணீர்                          1/4 கப்

செய்முறை

 

மேல் மாவை தயார் செய்ய வேண்டும்.   மைதா உடன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக இல்லாமல்  தள தள வென பிசைந்து கொள்ளவேண்டும். பிசைந்த மாவை ஒரு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.  ஒரு மணி நேரமாவது ஊற்றினால் மாவு மிருதுவாக  இருக்கும்.

 

பூரணத்திற்கு கடலைப் பருப்பை 1 1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் மீதமான தீயில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.  பிறகு தண்ணீர் வடிகட்டிமிக்ஸியில் போட்டு ஒரு திருப்பு திருப்பவும் லேசாக மசித்தால் போதும், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 1/4 கப்  ஊற்றி வெல்லத்தை போட்டு வெல்லம் கரைந்ததும் தண்ணீர் சுண்டியவுடன் மசித்த பருப்பு போட்டு நெய் ஊற்றி ஏலக்காய் தூள் போட்டு கிளறவும்.  ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக செய்து.  போளி மாவை சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி மூன்று  விரல்களால் தட்டி அதில் பருப்பு பூரணத்தை வைத்து மூடி மீண்டும் விரல்களால் தட்ட வேண்டும். ஒவென்றாக சப்பாத்தி கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கவும் திருப்பி போட்டு நன்கு சிவந்து வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here