HOW TO PREPARE BAKERY LADD0 IN TAMIL

49

 பேக்கரி லட்டு செய்வது எப்படி

 

லட்டு என்றால் நினைவுக்கு வருவது திருப்பதி, திருப்பதி என்றால் நினைவுக்கு வருவது லட்டு.  பேக்கரி லட்டு எப்படி செய்கிறார்கள் என பார்ப்போம்.  லட்டு எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு ஸ்வீட் ஆகும்.

பேக்கரி லட்டு

 

தேவையான பொருட்கள்

 

  • கடலை பருப்பு            250 கிராம்
  • சர்க்கரை                    400 கிராம்
  • ஏலக்காய் தூள்            1 டேபிள் ஸ்பூன்
  • நெய்                             2 டேபிள் ஸ்பூன்
  •  எண்ணெய்  பொறிக்க   தேவையான அளவு
  • முந்திரி                           பத்து
  • திராச்சை                        1 டேபிள் ஸ்பூன்
  • சோடா மாவு                     1 சிட்டிகை

 

செய்முறை

 

முதலில் கடலை  பருப்பை தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.  இரண்டு மணி நேரம் கழித்து ஊறியவுடன்  மிக்சியில் நரநர அரைக்கவும்.  சோடா மாவு 1 சிட்டிகை சேர்த்து மாவை பிசையவும்.   கடாயில் பொரிப்பதற்காக எண்ணெயில் சிறிய உருண்டையாக  போட்டு பொரிக்கவும்.  பொரித்த பின் ஆறியவுடன் மிக்ஸில் போட்டு  ஒரு திருப்பு திருப்பவும்.  பேக்கரி லட்டு இந்த முறையில் தான் செய்கிறார்கள்.

 

அகலமான பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 150 மில்லி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.  சர்க்கரை கரைந்து பாகு ஒரு கம்பி பதம் வந்தவுடன் பொரித்து வைத்த  உதிர்து வைத்த பூந்தியை பாகில் உதிர்த்து போட்டு கிளறவும்.  அத்துடன் நெய் சேர்க்கவும்.  நெய்ல் முந்திரி, திராச்சை பொரிக்கவும்.  ஏலக்காய்  தூள் சேர்த்து கிளறவும்.  தேவைப்பட்டால் FOOD கலர் சேர்த்துக் கொள்ளவும்.   பூந்தியை லட்டு உருண்டையாக பிடித்து கொள்ளவும். உங்களுக்கு தேவையான அளவில் லட்டு பிடித்துக் கொள்ளலாம்.

 

லட்டு தயார்.  அதுவும் பேக்கரி லட்டு  தயார்.  கடையில் கலர் பவுடர் போட்டு கண்ணை கவரும் வண்ணத்தில் விற்பார்கள்.   அதே சுவையில் நாமும் வீட்டிலே பேக்கரி லட்டு எளிய முறையில் செய்யலாம்.  லட்டுவை எல்லாரும் விரும்பி உண்பார்கள்.  எல்லாவயதினரும் விரும்பி உண்பார்கள்.  குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் இனிப்பு பலகாரம் லட்டு ஆகும்.  லட்டு பல வகைகளில் செய்கிறார்கள்.  பல முறைகளிலும் செய்கிறார்கள்.

 

நெய் லட்டு,  சதா லட்டு, பேக்கரி லட்டு, கோவா சேர்த்து செய்யும் லட்டு என பலவகைகளில் செய்வார்கள்.  திருப்பதியில் பிரசாதமாக கிடைக்கும் லட்டு  உலக முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற லட்டு ஆகும்.   பேக்கரி லட்டு இளம் பாகில் செய்வதால் மிகவும் மெருதுவாக இருக்கும்.   பேக்கரி லட்டு கடலை மாவில் பூந்தி போட்டு எண்ணெயில்  பொரிக்காமல், சிறிய போண்டா வாக போட்டு செய்கிறோம்.

 

பண்டைய காலம் தொட்டு இந்த இனிப்பு வகை இருந்து வருகிறது.  பல இனிப்பு வகைகள் வந்தாலும் இந்த லட்டுக்கு எப்பவும் மவுசுதான்.   கடவுளுக்கு லட்டு இனிப்பு வகையை படைக்கிறார்கள்.  பிரசாதமாக கொடுக்கிறர்கள்.  பண்டிகைகள் குறிப்பாக தீபாவளிக்கு லட்டு செய்கிறார்கள்.  திருமணம், காதுகுத்தல், சீமந்தம் போன்ற விசேஷங்களுக்கு லட்டு விரும்பி  செய்து அல்லது பேக்கரி இல் வாங்குகிறார்கள்.  சீர்வரிசையாக  மண மக்களுக்கு லட்டுவை கொடுக்கிறார்கள்.  இவ்வாறு புகழ் பெற்ற லட்டு எப்படி செய்வது என பார்த்தோம்.  நீங்களும் செய்து பார்த்து சாப்பிட்டு பார்த்து பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவருக்கு ஷேர் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here