HOW TO PREPARE SAMBA GODHUMAI HALWA IN TAMIL

27

சம்பா கோதுமை அல்வா செய்வது எப்படி

 

சம்பா கோதுமை அல்வா செய்வது எப்படி என பார்ப்போம்.  கோதுமை அல்வா என்றதும் நினைவுக்கு வருவது திருநெல்வேலி தான். சம்பா கோதுமையில் அல்வா செய்வது எப்படி

 

 

தேவையான பொருட்கள்

 

  • சம்பா கோதுமை                250 கிராம்
  • சர்க்கரை                            500 கிராம்
  • நெய்                                   500 கிராம்
  • முந்திரி                               25 கிராம்
  • எண்ணெய்                          50 கிராம்

செய்முறை

 

சம்பா கோதுமை அல்வா செய்வது எப்படி என்ன பார்ப்போம். சம்பா கோதுமை அல்வா செய்ய சம்பா கோதுமையை சுத்தம் செய்து நன்கு கழுவி கோதுமை முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி எட்டு  மணி நேரம் ஊற வைக்க வேண்டும், அல்லது இரவு ஊற வைத்து காலையில் செய்யலாம்.  எட்டு மணி நேரம் ஊறிய பின் தண்ணீரை வடிகட்டிய பின் ஒரு கப் அல்லது தேவையான அளவு நீர் ஊற்றி மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

 

அரைத்த சம்பா கோதுமையை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி பால் எடுத்து கொள்ள வேண்டும்.   கோதுமை பாலை ஒரு மூடி போட்டு பாத்திரத்தில்  பால் தெளியும் வரை காத்திருக்கவும்.   பால் தெளிந்தவுடன் மேலே தண்ணீரை வடிகட்டி பாத்திரத்தில் கீழ் இருக்கும் கெட்டியான பாலை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சம்பா கோதுமை பாலை ஊற்றி மிதமான தீயில் கோதுமை பாலை கரண்டியால் கிளறவும்.

 

அடி பிடிக்காதவாறு தொடர்ந்து கிளறி கொண்டு இருக்க வேண்டும்.   வேறு ஒரு அடுப்பில் கடாய் வைத்து சிறிது நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்துக் கொள்ள வேண்டும்.  மீதம் கடாயில் உள்ள நெய் இல் சிறிது சர்க்கரை சேர்த்துக்  கிளற வேண்டும்.  கிளறிக்கொன்டு இருக்கும் போது கிரிஸ்டலாக மாறும்  பிறகு கலர் மாறி பிரவுன் கலராக மாறும்.  அடுப்பை நிறுத்தி விடவும்.  கோதுமை பாலை அடி பிடிக்காதவாறு கிளறி கொண்டு இருக்க வேண்டும்.  சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கொன்டே இருக்க வேண்டும்.   சிறிது எண்ணெயை காய்ச்சி அதனுடன் சேர்க்க வேண்டும்.

 

நெய் சேர்க்க சேர்க்க சம்பா கோதுமை அல்வா கெட்டியாகி சுருண்டு வரும் அதன் நிறம் பொன்னிறமாக மாறும்.  அதன் நிறம் பார்க்க கவரும் வகையில் இருக்கும்.  சுருண்டு வந்தவுடன் சேர்த்த நெய் சம்பா கோதுமை அல்வாவிலிருந்து வெளியேறும் இது தான் சரியான பக்குவம்.  வறுத்த முந்திரியை சம்பா கோதுமை அல்வாவில் சேர்க்கவும்.  சேர்த்துக் கிளற வேண்டும்.  பிறகு அடுப்பை நிறுத்தவும்.  வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.  சூடாகவோ அல்லது அறியவுடனோ பரிமாறவும்.   சுவையான அருமையான சம்பா கோதுமை அல்வா ரெடி.

 

என்ன நண்பர்களே இன்று சுவையான சம்பா கோதுமை அல்வாவை எப்படி  செய்வது என அறிந்து கொண்டிர்ப்பீர்கள் என நம்புகிறேன்.  ஹல்வா என்றவுடன் நினைவில் வருவது பிரசித்திப்பெற்ற திருநெல்வேலி தான்.  நானும் எனது குடும்பத்தாரும் நண்பர் ஒருவருடைய திருமணத்திற்காக திருநெல்வேலி சென்றிருந்தோம்.  வாழை இலையில் மாலை நேரத்தில் சுட சுட அல்வாவை வாங்கி சாப்பிடோம்.  வாயில் வைத்தவுடன் அப்படியே கரைந்து தொண்டைக்குள் சென்றுவிடும்.   நீங்களும் செய்து சாப்பிட்டு பிடித்திருந்தால் மற்றவருக்கு ஷேர்  செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here